Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/உயர்வுதாழ்வு வேண்டாமே!

உயர்வுதாழ்வு வேண்டாமே!

உயர்வுதாழ்வு வேண்டாமே!

உயர்வுதாழ்வு வேண்டாமே!

ADDED : டிச 19, 2012 10:12 AM


Google News
Latest Tamil News
* அறிவுள்ள எதிரியை விட அறிவில்லாத நண்பர்களின் நட்பு ஆபத்தை விளைவிக்கும்.

* பகையை பகையால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாகத் தான் பகையுணர்வு நீங்கும்.

* பேராசை கொண்ட மனிதனின் மனதில் பயமும், வேதனையும் எப்போதும் குடிகொண்டிருக்கும்.

* பயனில்லாத ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தை மேலானது.

* உலக வாழ்வின் நோக்கம் பிறருக்கு உதவி புரிவதேஆகும்.

* உண்மையின் ஒளியானது, கார்மேகத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல உலகெங்கும் பிரகாசிக்கும்.

* எண்ணத்தால் கூட பிறருக்குத் தீங்கு நினைப்பது கூடாது. எப்போதும் மற்றவர்க்கு நன்மை அளிக்கும் விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.

* அனைவரின் உடலிலும் ஒரே ரத்தம் தான் ஓடுகிறது. பிறப்பால் யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us